Show all

திட்டம் (ஸ்கீம்) குழம்பும் நடுவண் அரசு! எப்படி சாகடிப்பது என்பதிலெல்லாம் குழப்பமேயில்லாமல் தெளிவாயிருக்கிறது?

12,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மரண தண்டனை கைதிகளை நச்சு ஊசி போட்டோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்வதைக் காட்டிலும் தூக்கில் போடுவதுதான் மிகவும் பாதுகாப்பானது என உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நடுவண் அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது. 

உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ரிஷி மல்கோத்ரா என்ற வழக்கறிஞர், ஒரு பொது நல வழக்கு பதிகை செய்து உள்ளார்.

அந்த வழக்கில் அவர், மரண தண்டனை கைதிகளைத் தூக்கில் போடாமல், வேறு வகையில் தண்டனையை நிறைவேற்ற வழி காண உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

மேலும், 'அரசியல் சாசனம் பிரிவு 21-ன் கீழ், ஒருவர் கண்ணியமான முறையில் இறப்பது அடிப்படை உரிமை' என அறிவிக்க வேண்டும் என்று கோரி உள்ளார்.

இந்த வழக்கை உச்ச அறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றது. இது தொடர்பாக நடுவண் அரசு பதில் மனு பதிகை செய்ய உத்தரவிட்டது

அதன்படி உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நடுவண் அரசு பதில் மனு பதிகை செய்தது. அதில், 'மரண தண்டனை கைதிகளை நச்சு ஊசி போட்டோ, துப்பாக்கியால் சுட்டோ கொல்வதைக் காட்டிலும் தூக்கில் போடுவதுதான் மிகவும் பாதுகாப்பானது, துரிதமானது' என கூறி உள்ளது.

 

மேலும், மரணம் உடனே நேரிடாமல் (அவஸ்தை) நீளுவதற்கான சாத்தியத்தையும் அது நீக்குகிறது எனவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

திட்டம் (ஸ்கீம்) என்ற உழவர்கள் வாழ்வாதார சமூக பிரச்சனைக்கெல்லாம் பொருள் தெரியாது குழம்பும் நடுவண் அரசு! எப்படி சாகடிப்பது என்பதிலெல்லாம் குழப்பமேயில்லாமல் தெளிவாய் இருக்கிறது நடுவண்அரசு?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,768.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.