10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பெட்ரோல், டீசல் விலைகளை கடந்த ஓராண்டாக எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் நிர்ணயம் செய்து கொள்ள நம்ப மோடி அண்ணாச்சி அதிகாரம் அளித்தார். கர்நாடக தேர்தல் கருத்துப் பரப்புதல் காலங்களில் பெட்ரோல், டீசல் விலைஉயர்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது தனிக்கதை. கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியது வரலாறு காணாத உச்சமாக, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 80 ரூபாயை தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.11-க்கும், டீசல் ரூ.72.14-க்கும் விற்பனையானது. (நேற்று டீசல் லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்தது.) சுமைகளை சுமப்பதே மோடி அரசில் பாரத்வாலா என்ற பெருமிதம் என்றால், இந்தியன் என்று சொல்லடா விசும்பி விசும்பி அழுவுடா என்று போய்க் கொண்டேயிருக்க வேண்டியதுதான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,797.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



