Show all

துப்பாக்கிச்சூடு! மனித உரிமைகள் ஆணையம் கவனஅறிக்கை; தமிழக அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும்

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து விளக்கமளிக்குமாறு தமிழக அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும் மனித உரிமைகள் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பள்ளி மாணவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. தங்களது வாழ்வாதாரத்துக்காக போராடிய மக்கள் மீது இப்படியொரு துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டது தமிழக மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டது ஏன் என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குறித்தும் இரண்டு கிழமைக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு தமிழக அரசுக்கும், தமிழக காவல்துறை அதிகாரிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,797. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.