Show all

கொரோனா பாதித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து!

கரோனா பாதிப்பு; உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக ஆளுநர் பன்வாரிலால் நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து

18,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நலமடைய திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நடுவண் உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்தேன். அவர் விரைந்து குணமடைந்து, நல்ல உடல்நலனைப் பெற்றிட வேண்டும் என விரும்புகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
 
மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விரைவில் முழுநலம் பெற்று மீண்டும் தனது நிர்வாகப் பணிகளில் கவனம் செலுத்த என்னுடைய மனமார்ந்த விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.