Show all

இப்படியும் ஒரு சோகம்!

பாசமாக வளர்த்தவர் உயிருடன் இல்லாததை அறிந்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட நன்றியுள்ள நாயின் செயல், சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

20,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தன்னை பாசமாக வளர்த்த பெண் உயிரிழந்ததை அறிந்த நன்றிக்கு பெயர் விளங்கும் நாய் ஒன்று, மாடியில் இருந்து குதித்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட நிகழ்வு சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் நலங்குத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் மருத்துவர் அனிதா ராஜ் சிங், சில ஆண்டுகளுக்கு முன்பு, தெருவோரமாக கவனிக்க ஆளில்லாமல் மெலிந்த நாய்க்குட்டி ஒன்று இருந்ததை கவனித்துள்ளார். அதனை மீட்டு, அதனைத் தேற்றி தன்னுடன் வளர்த்தார். அந்த நாயுக்கு ஜெயா எனப் பெயரிடப்பட்டு பாசமாக வளர்த்து வந்துள்ளார். நாயும், அவருடன் அதிக பாசத்துடன் வளர்ந்து வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த புதன் கிழமையன்று அனிதாவிற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை பார்த்த பாச நாய், செய்வதறியாமல் தவித்துள்ளது. பின்னர், வீட்டின் மாடிக்கு சென்று, கீழே குதித்து தன் உயிரை விட்டது.

இது குறித்து அனிதாவின் மகன் தேஜாஸ் கூறுகையில், ‛ஜெயாவை என் அம்மா, குடும்ப உறுப்பினர் போல பார்த்துக்கொண்டார். அவரது உடல் வீட்டிற்கு வந்ததும், மாடிக்கு சென்ற ஜெயா கீயே குதித்தது. காயங்களுடன் இருந்த ஜெயாவை மருத்துவமனை அழைத்து சென்றும் உயிரிழந்துவிட்டது’ என்றார்.

பாசமாக வளர்த்தவர் உயிருடன் இல்லாததை அறிந்து தன் உயிரையும் மாய்த்துக்கொண்ட நன்றியுள்ள நாயின் செயல் அனைவருக்கும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.