ருச்சி சோயா நிறுவனத்தை வாங்குவதால் பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் 2-வது மிகப் பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் பட்டியலில் இடம்பெறும்.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாபா ராம் தேவ் பதஞ்சலி என்கிற தலைப்பில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் தொடங்கி, பிஸ்கெட், நூடுல்ஸ் வரை பல பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
தற்போது கடனில் தத்தளிக்கும் ருச்சி சோயா நிறுவனத்தை விலைக்கு வாங்கவிருக்கிறார் பாபா ராம் தேவ். ஆனால் பாபவோடு இந்தியாவின் முன்னனி பணகாரர்களில் ஒருவரான கௌதம் அதானியும் அந்த நிறுவனத்தை வாங்க முயன்ற நிலையில், ருச்சி சோயா நிறுவனத்துக்கு 4,350 கோடி வரை விலை கொடுத்து பாபாவின் பதஞ்சலி நிறுவனம் வாங்க தயாராக இருக்கிறதாம். முன்பு பதஞ்சலி தருவதாகச் சொல்லி இருந்த தொகையை விட இந்த முறை 200 கோடி ரூபாய் கூடுதலாக கொடுக்க முன் வந்திருக்கிறது பதஞ்சலி.
இந்த 4,350 கோடி ரூபாயில், 115 கோடி ரூபாய் மட்டுமே ருச்சி சோயா நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் பயன்படுத்தப் போகிறார்களாம். பாக்கி தொகை முழுவதும் ருச்சி சோயா நிறுவனம் வாங்கி இருக்கும் கடன் தொகையைக் கட்டத் தானாம்.
கடந்த ஆண்டே ருச்சி சோயா நிறுவனம் தான் வாங்கிய கடன்களைக் கட்ட முடியாமல் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் சென்றது. அப்போது நிறுவனத்தை விற்று வரும் கடன்களை வங்கிகள் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுத்தது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம். அப்போதே அதானியின் வில்மர் நிறுவனம் ருச்சி சோயாவுக்கு 6000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருந்தது.
அதானியின் திட்டத்துக்கு சரி என்றன வங்கிகள். ஆனால் பதஞ்சலியோ, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் முறையிட்டு அதானியின் ஒப்பந்தத்தைக் காலி செய்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு அதானி இந்த ஒப்பந்தம் வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டது. தற்போது பதஞ்சலி 4,350 கோடி ரூபாய்க்கு ருச்சி சோயாவை வாங்க இருக்கிறது. இன்னும் சில வாரங்களில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகலாம்.
ருச்சி சோயா நிறுவனத்தை வாங்குவதால் பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் 2-வது மிகப் பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் பட்டியலில் இடம்பெறும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,118.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.