எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, வழக்கு நடத்த, உழவர்களிடம், 2 கோடி ரூபாயை, பாமகவினர் வசூலித்தனர் என, திமுக முன்னாள், சட்டமன்ற உறுப்பினர் இராசா குற்றம்சாட்டியுள்ளார்.
29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, வழக்கு நடத்த, உழவர்களிடம், 2 கோடி ரூபாயை, பாமகவினர் வசூலித்தனர் என, திமுக முன்னாள், சட்டமன்றஉறுப்பினர் இராசா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, முதன்முதலில், திமுகவைச் சேர்ந்த ரவிந்தீரன் தான், வழக்கறிஞர் கனகராஜ் மூலம், உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் நான்காவது நபராக நுழைந்தவர், பாமகவைச் சேர்ந்த அன்புமணி. இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து, எட்டு வழிச்சாலை திட்ட அறிவிப்பாணை ரத்து என, அறங்கூற்றுமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
சேலம் உள்ளிட்ட, 5 மாவட்ட உழவர்களிடம், அத்திட்ட வழக்கு செலவுக்கு, பாமகவினர், தலா, 2,000 ரூபாய் வீதம், 2 கோடி ரூபாய் வசூலித்தனர். முதலில் வழக்கு தொடுத்த, திமுக ஒரு காசு கூட, உழவர்களிடமிருந்து பெறாமல் வழக்கை நடத்தியது.
திமுக ஆட்சியில், என் தந்தை வீரபாண்டி ஆறுமுகம், பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் வந்த, சேலம் தொடர்வண்டி கோட்டம், அதிசிறப்பு மருத்துவமனை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை, அன்புமணி ராமதாஸ், தான் கொண்டு வந்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்டார்.
இது போன்ற பேச்சுகளை அன்புமணி ராமதாஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும், இனி இது தொடர்ந்தால், அவரது உண்மைஅடையாளத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கிறேன் என இவ்வாறு கூறியுள்ளார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசா
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,120.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.