Show all

3600 பேர்களை பலிகொண்டது சாலை பள்ளங்கள்!

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மட்டும் கடந்த ஆண்டில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.

பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு எடுக்க வேண்டிய மிக முதன்மை முன்னெச்சரிக்கை பணி சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்வதாகும். ஏனென்றால், மழை பெய்த பின்னர் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியிருக்கும் போது பள்ளம், மேடுகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.

இப்படி நாடு முழுவதும் கடந்தாண்டு சாலை பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் மட்டும் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3600 ஆகும். உத்தரப்பிரதேசம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 987 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 726 பேரும், ஹரியாவாவில் 522 பேரும் சாலை பள்ளங்களுக்கு பலியாகியுள்ளனர். சாலைகளை செப்பனிடும் பணிகளுக்காக பலநூறு கோடி ரூபாய்களை அரசு ஒதுக்கிய பின்னரும் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளது வேதனை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. 

கடந்த ஆண்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள், வீரர்கள் என மொத்தம் 803 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களை விட

சாலை பள்ளத்தினால் பலியானவர்கள் 4 மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,851.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.