01,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் என்ற இதழை நடத்தி வந்த சுஜாத் புகாரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய தனிப்பட்ட பாதுகாவலர்கள் இருவரும் இந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். நேற்று மாலை புகாரியை மர்மநபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் புகாரி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். இவர் தி இந்து பத்திரிக்கையில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்தார். அதன்பின் சொந்தமாக காஷ்மீர் குறித்து மட்டும் எழுதுவதற்காக ரைசிங் காஷ்மீர் இதழின் ஆசிரியர் ஆனார். அப்போதிலிருந்து காஷ்மீர் குறித்து தீவிரமாக எழுதினார். உலகம் முழுக்க உலகின் அமைதிக்காக செயல்படும் பல்வேறு இயக்கங்கள், குழுக்களில் இவரும் செயல்பட்டார். கடைசி நாள் வரை அமைதியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு எழுதி வந்தார். ஐநாவில் கூட அமைதி குறித்து பேசினார். இவரது இதழ் உலகம் முழுக்க பெயர் பெற்றது. இதனால் அரசு இவரின் செயல்படுகளை உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கியது. அரசு இவரின் இதழுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தது. இவர் இந்தியாவை எவ்வளவு தனது எழுத்துக்களில் தாக்கினாரோ அதே அளவு பாகிஸ்தானையும் தாக்கி எழுதி இருக்கிறார். இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரில் ஒரே விசயத்தைதான் செய்கிறது என்று எழுதியுள்ளார். ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு மட்டும் காஷ்மீர் மக்கள் இந்தியாவின் கண்களுக்கு எப்படி தென்படுகிறார்கள் என்று இவர் வெளிப்படையாக் விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலால் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்றும் எழுதியுள்ளார். இவர் மக்களுடன் இணைந்து செய்தி சேகரித்தார். காஷ்மீரில் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் களத்தில் சென்று இவர் தொகுத்து தந்துள்ளார். களத்தில் இறங்கி, தெருத்தெருவாக சுற்றி, மக்களிடம் பேசி இவர் தகவல்களை சேகரித்துள்ளார். இவர் கடைசி வரை மக்களின் குரலாகவே இருந்து வந்துள்ளார். இவரை மூன்று முறை கொல்ல முயற்சி நடந்தது. இவருக்கு இரண்டு காவலர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் எல்லாவற்றையும் மீறி நேற்று இவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். மூன்று பேர் சேர்ந்து இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பள்ளத்தாக்கு பகுதியில் பதட்டத்தை மேலும் அதிகரிக்க செய்து உள்ளது. இவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை புகாரியை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிளில் செல்லும் கண்காணிப்பு படக்கருவி காட்சிகளை வெளியிட்டு உள்ளது. குற்றவாளிகளை அடையாளம் காணவும், அவர்களை பிடிக்கவும் பொதுமக்கள் உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தும் உள்ளது. காவல்துறை வெளியிட்டு உள்ள காட்சியில் பயங்கரவாதிகள் அவர்களுடைய முகத்தை மூடியுள்ளனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,819.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



