02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியாகும் 'ரைசிங் காஷ்மீர்' இதழின் தலைமை ஆசிரியர் சுஜாத் புகாரி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய பாதுகாப்பு படைகளை, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா இந்தியா, பயங்கரவாத இயக்கங்களாக பட்டியல் இட்டிருக்கும் இயக்கங்கள் விமர்சனம் செய்து உள்ளன. ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படைகளின் மீறல்கள் தொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமைகள் அறிக்கை வெளியிட்ட நிலையில் பத்திரிக்கையாளர் சுஜாத் புகாரி கொல்லப்பட்டு உள்ளார் என்று அந்த இயக்கங்கள் கூறியுள்ளன. இதற்கிடையே லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் சுஜாத் புகாரி கொல்லப்பட்டதில் இந்திய முகமைகளின் சதிதிட்டம் உள்ளது. விடுதலைக்காகப் போராடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் எதிராகவும் இந்திய படைகள் எதிர்ப்பை கொண்டிருக்கிறது. அவர்களை எல்லாம் இந்தியப்படைகள் இலக்காக்கி தாக்குகிறது என கூறியுள்ளது. இதற்கிடையே சுஜாத் புகாரியை சுட்டுக்கொன்ற மர்மநபர்கள் மூன்று பேரது புகைப்படத்தை ஜம்மு காஷ்மீர் காவல்துறை வெளியிட்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொண்டு உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,820
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



