31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது. சாத்தியம் இல்லாத மூன்றாவது வகையாக எதிர் பார்த்ததான- நடுவர் அமர்வில் இருக்கும் இரு அறங்கூற்றுவர்களும் செல்லும், செல்லாது என்று இரு வேறு தீர்ப்புகளை வழங்கி வழக்கு இன்னும் ஆறு மாதம் ஒரு ஆண்டு என்று தள்ளிப் போடப் படலாம். என்று எதிர் பார்த்தவகை, சாத்தியப் பட்டு தீர்ப்பாக வந்திருக்கிறது. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு வந்திருக்குமானலும், (சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும் அதிமுக ஆட்சி கலையும்.) தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரைத் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று தீர்ப்பு வந்திருக்குமானாலும், (பதினெட்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் ஆளும் அதிமுக உறுதியாக வைப்புத் தொகை கூட ஒரு தொகுதியிலும் வாங்க முடியாது. ஆளும் அதிமுக ஆட்சி உறுதியாக கலையும். சட்டமன்றத் தேர்தல் வரும்.) நடுவண் பாஜக அரசின் விருப்பமும், ஆளும் அதிமுகவின் விருப்பமும். முடிந்த வரை நாடாளுமன்றத் தேர்தல் வரையிலுமாவது, அதிமுக ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதுவே. அந்த விருப்பத்திற்கு ஆதரவாக தீர்ப்பு அமைந்துள்ளது. முந்தைய இரண்டு வகை தீர்ப்புகள் தாம் நாற்பத்தைந்து நாற்பத்தைந்து விழுக்காடுகள் எதிர்பார்க்கப் பட்டன அதிமுக, பாஜக தவிர்த்த அனைத்து வட்டாரத்திலும். ஆனால் பத்து விழுக்காடு எதிர்பார்ப்பில், சாத்தியமில்லை ஆனாலும் அதிமுக பாஜகவிற்கு ஆதரவான அந்த தீர்ப்பும் சாத்தியமாகலாம் என்ற தீர்ப்பே வந்திருக்கிறது. சரி இருக்கட்டும்! மக்கள் மீது அணுவளவும் அச்சமே இல்லாத சிறுபான்மை அரசை ஆளவிட்டு எத்தனை நாளைக்கு மக்கள் துன்பத்தை அனுபவிப்பது? அறங்கூற்று மன்றம் அந்த மூன்றாவது அறங்கூற்றுவரை ஒரு கிழமைக்குள் நியமித்து, இது தீர்ப்புக்கானதுதான்; அதிமுக பாஜகவின் விருப்பத்திற்கானதல்ல என்று நிறுவி மக்களாட்சி தத்துவத்தின் ஒரு தூணாக அறங்கூற்று மன்றத்தை தக்க வைக்கும் என்றே நம்புவோம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,818.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



