யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது போல தமிழகம் சட்ட மன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில்- சென்னை, கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை முன்னெடுத்திருப்பது முன்னே வரும் மணியோசையாகப் பார்க்கப்படுகிறது. 14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சட்டமன்றத் தேர்தல் என்றாலே அந்த மாநிலத்தின் மாநில ஆட்சிக்கு முனையும் கட்சிகளின் பெரும்புள்ளிகள் கணக்குகளை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. மிக விரைவில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வரவுள்ள நிலையில், சென்னை, கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை முன்னெடுத்திருப்பது முன்னே வரும் மணியோசையாகப் பார்க்கப்படுகிறது. ஒன்றிய ஆட்சிக்கு முனையும் காங்கிரசு மற்றும் பாஜகவின் பெரும்புள்ளிகளுக்கு இப்படியான நெருக்கடி அமைவதில்லை என்பதை தனது கடைசிகாலத்தில் கண்டு கொண்ட செயலலிதா அவர்கள் நாற்பதும் நமதே என்று ஒன்றிய ஆட்சிக்கு முனையும் ஒரு நல்லதொரு முயற்சியை முன்னெடுத்தார்கள். ஆனால், இப்படி ஒன்றிய ஆட்சிக்கு முனைகிற கட்சிகளின் பெரும்புள்ளிகளுக்கு இப்படியொரு சிறப்பு பாதுகாப்பு வாய்ப்பு இருப்பதை, வட இந்திய மாநிலக்கட்சியினர் யாரும் புரிந்து கொள்ளாமலே போராட்டத்தில் காலத்தை ஓட்டி வருகின்றனர். அதனால் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் செயலலிதா இந்தியத் தலைமைஅமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு தட்டிப் போனது. இந்தியாவில் ஹிந்தி பேசும் தலைமையைக் கொண்ட கட்சிகளான காங்கிரசும், பாஜகவும் தனிப்பெரும்பான்மை பெற்று ஒன்றிய ஆட்சியில் தொடரும் வரை- மாநிலக் கட்சிகள், ஒன்றுக்கு ஒன்று (திமுக, அதிமுக போல) போட்டி போட்டுக் கொண்டு மாநில மக்களுக்கு முழுமையாக உழைக்க முடியாத நிலை தொடர்ந்து கொண்டே இருக்கும். மாநிலஆட்சிக்கு முனையும் கட்சிகள் என்றாலே ஊழல் கட்சிகள் என்று அடையாளப்படுத்துவதற்கு சாம பேத தான தண்ட முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வரும். வருகின்றன காங்கிரசாலும், அதே பாணியில் பாஜகவாலும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை மிரட்டி கூட்டுக்கு ஒப்புதல் வாங்கிச் சென்றபோதே, இனி திமுக நோக்கி மணியோசை அடிக்கப்படும் என்று பேச்சு ஓடியது. இந்த நிலையில்தாம் சென்னை, கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் வருமான வரித்துறை சோதனை முன்னெடுத்து ரூ.450 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.450 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதேபோன்று, மொரீசியஸ் நாட்டில் ரூ.2300 கோடி முதலீடு செய்து முதலீட்டுக்கான லாப தொகையை மறைத்ததும் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சில நேரங்களில் காட்டில், மானுக்கு விரித்த வலையில் வேறு சில பல விலங்குகள் சிக்கியதாக அனுபவ பதிவுகள் உள்ளன போல, மராட்டியத்தின் மும்பையைச் சேர்ந்த பேரறிமுக மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் முன்னாள் இயக்குநருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினார்களாம். இதற்காக சென்னை, மும்பை, ஐதராபாத் மற்றும் கடலூர் உள்ளிட்ட 16 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



