புலி வருகிறது கதையில் எதிர்பாராத நிலையில் புலி வந்தேவிட்டது போல, இரஜினி வந்தே விடுவாரா அரசியலுக்கு? பரபரப்பில் தமிழகம். 13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இரஜினி மக்கள் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் இரஜினிகாந்த் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை மறுநாள் காலை நடிகர் இரஜினிகாந்த், இரஜினி மக்கள் மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து இரஜினிகாந்த் இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தொடங்குவது குறித்து தனது கொண்டாடிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே இரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டம் முதன்மைத்துவம் பெறுகிறது. காய்ச்சல் ஏற்பட்டதாகவும், கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, இரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கடிதம் ஒன்று அண்மையில் வெளியாகி இருந்தது. சட்டமன்றத் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வரும் நிலையில் இரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் இரஜினி நடத்த உள்ள ஆலோசனையில் அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான முதன்மை முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களைச் சந்திப்பதைத் தவிர்க்குமாறு தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டுமே உண்மை என இரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



