07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முப்தி தனது முதல்வர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்துவதற்கான ஒப்புதலை குடிஅரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்கு ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்திய ஆட்சிப் பணித்துறை அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியனை புதிய தலைமை செயலாளராக ஆளுநர் வோரா நியமித்துளார். அத்துடன் ஆளுநரின் ஆலோசகர்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணித்துறை அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி.விலாஸ் ஆகியோர். வீரப்பன் யார்? எதற்காக அவரைச் சுட்டார்கள்? சுட்டுப் பிடித்தார்களா? பிடித்துச் சுட்டார்களா? என்ற கேள்விகளுக்கு விடையில்லாமல், அந்த, அதிரடிப்படையினருக்கு விஜயகுமார் இந்தியகாவல்பணித்துறை அதிகாரி தலைமை தாங்கினார் என்பதும், விஜயக்குமார் அண்மையில் ஓய்வு பெற்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,825.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



