07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது இந்திய தொலைக்காட்சிகளில் அதிகம் பிரபலமான மெய்மைநிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் என எந்த சந்தேகமும் இல்லாமல் கூறலாம். தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம், ஹிந்தி, மராத்தி என பல மொழிகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை தயாரிப்பது அமெரிக்க நிறுவனமான எண்டமால் சைன்தான். 21வது சென்ஞ்சுரி பாக்ஸ் மற்றும் அப்பல்லோ எனும் தனியார் நிறுவனம்தாம், எண்டமால் சைனின் உடைமையாளர்கள். இந்நிலையில் எண்டமால் சைன் அணி விரைவில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக முதற்கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. சர்வதேச அளவில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனமான இதன் மொத்த மதிப்பு ரூ.27,238,00,00,000 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,825.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



