07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து ஏதாவது பிரச்சனை அதிலும் குறிப்பாக தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்படும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். பிக் பாஸே எதிர்பார்த்தாலும் கூட சண்டை போட மாட்டார் போல பாலாஜி. அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரிந்து வாழும் மனைவி நித்யாவுடன் சமாதானம் ஆகிவிட வேண்டும் என்ற பெரிய திட்டத்தோடு உள்ளார். அதனால் அனைவரும் எதிர்பார்க்கும் பிரச்சனை ஏற்படாமலேயே போகலாம். இல்லை சும்மா பெயருக்கு சண்டை போடலாம். பஞ்சாபி பெண்ணான யாஷிகா ஆனந்தும், பெங்காளி பெண்ணான ஐஸ்வர்யா தத்தாவும் தான் பிக் பாஸ் வீட்டில் அதிகமாக தமிழில் பேசுகிறார்கள். அவர்களின் முயற்சியை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். வேறு மாநில பெண்களாக இருந்தாலும் தமிழில் பேசுவதை பாராட்டாமல் கிண்டல் செய்கிறார்களே என்று யாஷிகா, ஐஸ்வர்யா தத்தாவிடம் கூறி வருத்தப்பட்டுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த போட்டியாளர்களில் பலர் ஒரே கெத்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நித்யா பாலாஜி ரொம்பவே கூடுதல். யாஷிகா, ஐஸ்வர்யாவின் முயற்சியை சக போட்டியாளர்கள் பாராட்டாவிட்டாலும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். யார் கிண்டல் செய்தால் என்ன பொண்ணுங்களா, நீங்கள் தமிழில் பேசுங்க. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,825.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



