இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநர்கள், இரண்டு ஆட்சிபணித் துறை அதிகாரிகள், தற்போது சென்னை உயர்அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தகில் ரமானி என்று உயர் பதவியில் இருப்பவர்களின் பதவி விலகல் தொடர்கதையாகி வருவது: மக்கள் நடுவே பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மும்பை உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவராக இருந்த தகில் ராமனி, கடந்த ஆண்டு சென்னை உயர்அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவராக நியமிக்கப்பட்டார். இவரை மேகாலயா உயர்அறங்கூற்றுமன்றத்திற்கு மாற்றி சென்ற புதன் கிழமை உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் தலைமையிலான 'அறங்கூற்றுவர் நியமன அமைப்பு' முடிவு செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, அறங்கூற்றுவர் நியமன அமைப்புக்கு தகில் ரமானி வேண்டுகோள் விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து, அதிருப்தி அடைந்த அறங்கூற்றுவர் தகில்ரமானி, பதவி விலகியுள்ளார். புதவி விலகல் கடிதத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கும், உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய்க்கும் அனுப்பி வைத்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,268.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



