இந்தக் கிழமையின் வெளியேற்றப் படலம் பிக்பாஸ் மற்றும் கமலின் வெற்றி தோல்விக்கு திருப்பு முனையாக அமையும். வெற்றி உண்மையான விளையாட்டிற்கா? சூதாட்ட யுக்திக்கா? ஏன்பதை தீர்மானிக்கும் கிழமை இதுவாகும். 22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிக்பாஸ் விளையாட்டின் மூன்றாவது பருவம்: மதுமிதா, சேரன், வனிதா, சாக்சி, அபிராமி, மீரா, ரேஸ்மா, கஸ்தூரி, செரின், லாஸ்லியா, மோகன், பாத்திமா, சரவணன், தர்சன், முகென், சாண்டி கவின், என பதினேழு போட்டியாளர்கள் களமாடத் தொடங்கியது விளையாட்டு. இந்த விளையாட்டில் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை தங்குகிறவர் விளையாட்டின் வெற்றியாளர் ஆவார். பிக்பாஸ் பருவம் ஒன்றில் கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் தங்குவற்கு கையாள வேண்டிய யுக்தியை போட்டியாளர்கள் யாரும் சிறப்பாக முன்னெடுக்க முயலாமல் இயல்பாக நடந்து கொண்டதால், கடைசி வரை தங்கிய சினேகனைக் கடந்து ஆரவ் வெற்றியாளர் ஆனார். பிக்பாஸ் பருவம் இரண்டைப் பொறுத்தவரை கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் தங்குவற்கு போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான யுக்தியைக் கையாண்டனர். அதனால் பிக்பாஸ் பருவம் இரண்டு ஒரு நாடகமாகவே அமைந்தது. மிகப் பெரிய போரட்டத்திற்குப் பிறகு ரித்வீகா வெற்றியாளராக தெரிவானார். பிக்பாஸ் பருவம் மூன்றை: கமல், பிக்பாஸ் இருவரையும் கூட முறியடித்து, கவின் சாண்டியுடன் இணைந்து, பிக்பாஸ் விளையாட்டு என்பதை கவின் சாண்டி அணியினரின் சூதாட்ட அரங்கமாக மாற்றியுள்ளனர். இந்த சூதாட்டத்தில் தாங்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை தங்குவதற்கான யுக்தியை மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர். கவின் அணி சூதாட்டத்தில் முன்னெடுக்கப் பட்ட யுக்திகள்: வெளியேற்றப் பட்டியலில் வந்தால்தானே பார்வையாளர்கள் வாக்குகள் அடிப்படையில் நாம் வெளியேற்றப்படுவோம், வெளியேற்றப் பட்டியலுக்கே வராமல் போனால்? என்று யோசித்து 1.வெளியேற்றப் பட்டியலில் வராமல் இருப்பதற்காக நண்பர்கள் குழுவை உருவாக்குவது. அப்படி உருவாக்கப் பட்ட குழு உறுப்பினர்கள் கவின், சாண்டி, லாஸ்லியா, தர்சன், முகென். 2.காதல் மோகத்திற்கு பலியாகிய பெண்களை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றுவது. அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் சாக்சி, அபிராமி, மீரா 3.தங்கள் நட்பு வட்டத்திற்கு வெளியில் இருப்பவர்களை உடனடியாகப் வெளியே துரத்தி அடிப்பது. அப்படி துரத்தி அடிக்கப் பட்டவர்கள் மதுமிதா, வனிதா. இந்த மூன்று யுக்தியிலிருந்தும் தப்பித்து வந்து இருப்பவர்கள் சேரன், செரின், வனிதா, மூவர் மட்டுமே. இதில் செரின் தப்பித்து வந்தது நண்பர்கள் அணியோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்ததால் எதிர்பாரத விதமாக தப்பித்து வந்திருக்கிறார். வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததால், தலைவியானதால் தப்பித்து வந்து கொண்டிருக்கிறார். வீட்டின் உண்மையான விளையாட்டுத் தலைவனாக மக்களால் காப்பாற்றப் பட்டு வந்திருப்பவர் சேரன். இந்தக் கிழமை வெளியேற்றக் களத்தில் இருப்பவர்கள் நண்பர்கள் அணியில் ஒட்டிக் கொண்டிருந்த கருப்புஆடு செரின். பிக்பாஸ் வீட்டின் உண்மையான விளையாட்டுத் தலைவன் சேரன். இருவரில் இந்தக் கிழமை யார் வெளியேற்றப் படுவார்கள் என்று சொல்ல முடியாத நிலையில் கருத்துக் கணிப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. வனிதாவின் முட்டாள் நடவடிக்கையால், கருப்புஆட்டுக்கு அனுதாப வாக்குகள் அதிகரித்து வருகின்றன. செரின் இந்தக் கிழமை வெளியேற்றப் பட்டால் நண்பர்கள் அணிக்கு சேரன் சவாலாக அமைந்து நண்பர்கள் அணியின் சூதாட்டம் தோல்வியைத் தழுவும். ஒரு வேளை சேரன் வெளியேற்றப் பட்டால் நண்பர்கள் அணியின் சூதாட்ட யுக்தி வெற்றி வாகை சூடும். கவின் அல்லது சாண்டி பிக்பாஸ் தலைப்பை வெல்வார்கள். வனிதாவை மக்கள் வெளியேற்றுவார்கள். செரின் அடுத்த கிழமையே வெளியேறுவார். லாஸ்லியா நண்பர்களின் அணியின் பலிகடாவாக்கப் படுவார். ஒரு வேளை சேரன் இந்தக் கிழமை காப்பாற்றப் படுவாரேயானால், நண்பர்கள் அணியின் சூதாட்ட யுக்தி சிறப்பாக முறியடிக்கப் பட்டு சேரன் அல்லது லாஸ்லியா பிக்பாஸ் தலைப்பை வெல்வார்கள். சேரனுக்கும், செரினுக்கும் குறைந்த வாக்கு வேறுபாடுகளே உள்ளன. பிக்பாஸ் வாக்குப் பட்டியலில் சேரனுக்கு அதிக வாக்குகள் இருந்து சேரன் காப்பாற்றப் படுவாரேயானால் பிக்பாஸ் நிகழ்ச்சி பருவம் மூன்றுக்கு உண்மையான வெற்றி. திருப்பு முனையான இந்தக் கிழமையில் சேரன் வெளியேற்றப் படுவாரேயானால், கவின் சூதாட்ட யுக்தி வெற்றி வாகை சூட கமலுக்கும் பிக்பாசுக்கும் தோல்விதான். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,269.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



