தமிழ், தமிழர், தமிழர் பண்பாடுகள் என்று வரும் போது, நடுவண் அரசு முளையைக் கழட்டி மேசையில் வைத்து விட்டு, நடைமுறை போக்கில் என்னவோ நடந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் சரி தற்போதைய பாஜக ஆட்சியிலும் சரி. தமிழக விரோத பார்ப்பனிய அதிகாரிகள் தமிழர்களை வீழ்த்தும் வகையாக முடிவெடுத்து செயல் படுத்துவார்கள். பாஜகவின் தமிழகத் தேர்தல் தோல்வி எதிரொலியாக தமிழக பாஜகவினருக்கு சிந்திக்கலாம் என்று விடுதலை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பத்து நாட்களுக்கு முன்பு தமிழக விரோத பார்ப்பனிய அதிகாரிகளால்- தமிழ், தமிழர், தமிழர் பண்பாடுகள் என்று வரும் போது, நடுவண் அரசு முளையைக் கழட்டி மேசையில் வைத்து விட்டு, நடைமுறை போக்கில் என்னவோ நடந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடும் நிலைபாட்டை சாதகமாகக் கொண்டு விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது. பாஜகவின் தமிழகத் தேர்தல் தோல்வி எதிரொலியாக தமிழக பாஜகவினருக்கு சிந்திக்கலாம் என்று விடுதலை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில்-விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிக்கப்பட்டது சரியா என்பதை ஆராய்ந்து உறுதி செய்ய, தற்போது டெல்லி உயர் அறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுவராக இருக்கும் சங்கீத சிங்ரா செகல் தலைமையில் குழு அமைத்து நடுவண் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையின் படியே விடுதலை புலிகள் மீதான தடை நீட்டிக்கப்படுமா இல்லை நீக்கப்படுமா என்பது தெரியவரும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,166.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.