Show all

இந்திய உளவுத்துறை எச்சரிக்கை! இராமர் கோயிலுக்கு எதிர்வினையாக இந்திய விடுதலை நாளின் போது அயோத்தியில் தாக்குதலுக்கு முயற்சியாம்

இராமர் கோயிலுக்கு எதிர்வினையாக இந்திய விடுதலை நாளின் போது, அயோத்தியில் தாக்குதலுக்கு முயற்சி முன்னெடுக்கப் படுதாக- இந்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்;டு வருகிறது.

15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: உச்ச அறங்கூற்றுமன்றம் பஞ்சாயத்தை ஒரு வழியாக முடித்து வைத்த நிலையில்- அயோத்தியில் இராமர் கோவிலுக்கு வரும் புதன் கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தலைமைஅமைச்சர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க மாநில முதலமைச்சர்கள் உட்பட, பல்வேறு முதன்மை அறிமுகங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்வினையாக இந்திய விடுதலை நாளின் போது அயோத்தியில் ஒரு தாக்குதல் நடத்த, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக, உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதற்காக லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது அமைப்புகளைச் சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.

ஐந்து குழுக்களை அனுப்பி பல இடங்களிலும் தாக்குதல் நடத்தி, உள்நாட்டு குழுக்களால் நடைபெற்ற தாக்குதல் போலத் தோற்றத்தை ஏற்படுத்த ஐ.எஸ்.ஐ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலைத் தடுக்க டெல்லி, அயோத்தி, காஷ்மீர் ஆகிய இடங்களில் சோதனை செய்யவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.