டெல்லி மக்கள் தேச விரோதிகளுக்கு வாக்களிக்கவேண்டாம் என்ற தலைமைஅமைச்சர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். 01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி மக்கள், தேச விரோதிகளுக்கு வாக்களிக்கவேண்டாம் என்ற தலைமைஅமைச்சர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. பாஜக 8 இடங்களை கைப்பற்றி படுதோல்வியடைந்துள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான நவாப் மாலிக் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- பாஜகவின் வெறுப்பு அரசியல் மற்றும் அழுத்த தந்திரங்களை கண்டு மக்கள் மிகுந்த சோர்வு அடைந்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் சில தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட வழக்குகள் இருக்க வேண்டும் என்பதை பாஜக உறுதி செய்தது. ஆம் ஆத்மி கட்சி தொண்டர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சில விசாரணைகளும் நடத்தப்பட்டன. ஆனால் இவை எதுவும் பாஜகவுக்கு சாதகமாக செயல்படவில்லை. தேர்தலில் டெல்லி மக்கள் தேச விரோதிகளுக்கு எதிராக வாக்களிக்ககூடாது என தலைமைஅமைச்சர் மோடியும் மற்ற பாஜக தலைவர்களும் கேட்டுக்கொண்டனர். ஆகையால் டெல்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து அவர்களை வெற்றி அடைய செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



