உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது சிறப்பு விசாரணை குழு. 23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சில மாதங்களுக்கு முன்னர் ரஞ்சன் கோகாயும் மற்ற சில உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்களும், தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா முதன்மையான, சர்ச்சைக்குரிய வழக்குகளை குறிப்பிட்ட சில அறங்கூற்றுவர்களுக்கு மட்டுமே விசாரணைக்கு ஒதுக்கீடு செய்கிறார் என்னும் திடுக்கிடும் குற்றச்சாட்டை இதழியலாளர் சந்திப்பில் முன்வைத்தனர். உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவரைப் பற்றி சக அறங்கூற்றுவர்களால் பொதுவெளியில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது அதுவே முதல்முறை. ரஞ்சன் கோகாய் இந்திய உச்சஅறங்கூற்றுமன்றத்தின் 46வது தலைமை அறங்கூற்றுவராக கடந்த ஆண்டு பதவியேற்றார். ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, அறங்கூற்றுவர் எஸ்ஏ பாப்டே தலைமையில் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அக்குழுவில் இடம் பெற்றிருந்த அறங்கூற்றுவர் என்.வி ரமணாவுக்கு பதிலாக அறங்கூற்றுவர் இந்து மல்ஹோத்ரா இருப்பார் என்று பிறகு அறிவிக்கப்பட்டது. இவ்வாறன நிலையில் இன்று: புகாரில் எந்த முகாந்திரமும் இல்லாததால், அதனை தள்ளுபடி செய்வதாக உள்விசாரணைக்குழு குறிப்பிட்டு தள்ளுபடி செய்துள்ளது. உள்விசாரணைக்குழுவின் அறிக்கை உச்சஅறங்கூற்று மன்றத்தின் மூத்த அறங்கூற்றுவரிடம் சமர்பிக்கப்பட்டதோடு, இதில் சம்பந்தப்பட்ட தலைமை அறங்கூற்றுவர் இரஞ்சன் கோகாய்க்கும் அதன் நகல் அனுப்பப்பட்டது -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,144.
இந்திய உச்ச அறங்கூற்றுமன்றத்தின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தற்போதைய தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை உச்ச அறங்கூற்றுமன்றத்தின் 22 அறங்கூற்றுவர்களுக்கும் கடந்த மாதம் புகார் தெரிவித்திருந்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.