Show all

அடுத்த ஆண்டு புழக்கத்திற்கு வருகிறது! இந்தியப் போர்த்துறையில் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட ‘அம்பு’ ஏவுகணை

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ‘அம்பு’ என்ற வான் ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இது இந்தியப் போர்த்துறையில் அடுத்த ஆண்டு புழக்கத்திற்கு வருகிறது.

05,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் ‘அம்பு’ என்ற வான் ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இது இந்தியாவால் உருவாக்கப்பட்ட முதல் வான்-வான் ஏவுகணை ஆகும். அதாவது விமானத்தில் எடுத்துச் சென்று வானத்தில் இருந்து, வானத்தில் பறக்கும் எதிரி நாட்டு விமானத்தை அழிக்கும் வகைக்கான ஏவுகணையாகும். அதனால் இது வான்-வான் ஏவுகணை என அழைக்கப்படுகிறது. இந்த ஏவுகணையை புவியில் இருந்து செலுத்த முடியாது.

எதிரி விமானம் 80 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போதே இந்த ஏவுகணையைச் செலுத்த இயலும். எதிரி விமானத்தை தொடர்ந்து துரத்தி சென்று அழிக்கும் வகையில் இதன் வழிகாட்டி அமைப்புகள் செயல்படுகின்றன, என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஏவுகணையின் வேகம் ஒலியின் வேகத்தைப் போல நான்கு மடங்கு என்று சொல்லப்படுகிறது. தவறாக ஒளியின் வேகம் என்று நினைத்துக் கொள்;ள வேண்டாம். ஒளியின் வேகம் வினாடிக்கு இரண்டு இலட்சத்து தொன்னூற்று ஒன்பதாயிரம் கிமீட்டர்கள் ஆகும். ஒலியின் வேகம் 2.92 வினாடிக்கு ஒரு கிமீட்டர் தூரம் மட்டுந்தான்.

ஒலியை விட 4 மடங்கு வேகத்தில் பாய்ந்து தாக்கி அழிக்கும் அம்பு ஏவுகணை பரிசோதனை நடத்துவதற்கான வாய்ப்பு நான்கு மாதங்களுக்குள் கனிந்து வரும் என்று கருதப்படுகிறது. 
 
விமானத்தில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணையின் தாக்குதல் தொலைவு 100 கிலோ மீட்டரில் இருந்து 160 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சோதனைகள் முடிந்து அடுத்த ஆண்டு இந்தியப் போர்துறையில்  இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விமானப்படை மற்றும் கடற்படை சார்பில் 288 அம்பு ஏவுகணைகள் வடிவமைப்புக்கு கேட்பு கொடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேலில் இருந்து இறக்குமதி செய்யும் ஏவுகணைகளுக்கு மாற்றாக இது இருக்கும் என்றும், இரவு, பகல் மற்றும் அனைத்துக் காலநிலைகளிலும் இந்த ஏவுகணையைப் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.