இந்த முறை தலைமை அமைச்சர் வேட்பாளராக இராகுல் காந்தியை கூட்டணிகட்சியில் ஸ்டாலின் மட்டுமே முன் மொழிந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த இராகுல் கட்சிக்காரர்களால் கழட்டி விடப் பட்ட நிலையில், காங்கிரசுக்கான வெற்றி இராகுல் உழைத்த அளவுக்கு மட்டுமானதாக அமைந்தது. இதை தெளிவாக அறிந்த இராகுல் காந்தி தனக்கு கட்சித்தலைவர் பதவி வேண்டாம் என்று மறுத்து வருகிறார். 16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மட்டுமல்ல, காங்கிரசை மீண்டும் வெற்றிபெறச் செய்யும் முகமாகவும், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் உறுதியாக இருக்கிறார். மேலும் நேரு குடும்பம் அல்லாத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும்;. துலைமை அமைச்சர் வேட்பாளரும் கட்சி தலைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற யோசனையை மூத்த தலைவர் சோனியாவிடம் ராகுல் தெரிவித்துள்ளார். இராகுல் உழைப்புக்கு மட்டுமான பலனாக, நாடாளுமன்றத் தேர்தலில் 52 தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தோல்விக்கு பொறுப்பேற்று மட்டுமல்ல, காங்கிரசை மீண்டும் வெற்றிபெறச் செய்யும் முகமாகவும், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ராகுல் உறுதியாக இருக்கிறார். இது தோல்விக்கு பொறுப்பேற்பு என்றாலும் கூட முதன்மையாக கட்சியை வெற்றி பெறச் செய்யும் நோக்கத்திற்கானது என்கிறார் இராகுல். மூத்த தலைவர்களுக்கு இது மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது. ஆனால் நாடு முழுவதும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் தலைமையில் சிறப்பு கூட்டம் நடத்தி, 'இராகுல் பதவி விலகக் கூடாது' என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர். தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இதற்கான ஊர்வலம் நடந்தது. 'ராகுல் தொடர்ந்து தலைமை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும்' என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் கட்சி தலைவர் பதவியை வேறு ஒருவரிடம் தரவும் கட்சியின் தலைமைஅமைச்சர் வேட்பாளராக தொடருவதுமான தனது முடிவை இராகுல் தெளிவு படுத்தியுள்ளார். எனவே நேரு குடும்பம் அல்லாத ஒருவரிடம் கட்சி தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் என சோனியாவிடம் இராகுல் வலியுறுத்தி உள்ளார். மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத் போன்றவர்களில் ஒருவரை கட்சி தலைவ ராக நியமிக்கவும் பரிந்துரைத்துள்ளார். மேலும் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அஜித்சிங், சங்மா போன்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும்; மம்தா அல்லது சரத்பவார் ஆகியோரில் ஒருவருக்கு காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுக்கலாம் என்ற யோசனையும் பரிசீலிக்க பட்டு வருகிறது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,168.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.