ஒப்பந்தக்காரர் நேசமணி நலமுடன் இருக்க வேண்டுவதுதான் உலக அளவில் இரண்டாவது நிலையில் தலைப்பு ஆகியிருக்கும் கீச்சுப் பதிவு. அதுபோலவே, நடிகை டாப்சியின், கேம்ஓவர் முன்னோட்டம் வலையொளியில் அதிகமாக பார்க்கவும், பகிரவும் பட்டு வருகிறது. 16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகை டாப்சி தற்போது கேம் ஓவர் என்ற மிரட்சிப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிவருகிறது. இப்படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோசும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இதனை தயாரித்து வருகிறது. இப்படத்தின் விளம்பரம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ரசிகர்கள் டாப்ஸியின் மிரட்டலான நடிப்பை வியந்து பாராட்டினார். இந்நிலையில் தற்போது டாப்சியின் மிரட்டலான நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் முன்னோட்டத்தை நடிகர் தனுசும், தெலுங்கு முன்னோட்டத்தை நடிகர் ராணாவும் ஹிந்தி முன்னோட்டத்தை இயக்குனர் அனுராக் கஷ்யாப்பும் வெளியிட்டுள்ளனர். நடிகை டாப்சியின், கேம்ஓவர் முன்னோட்டம் வலையொளியில் அதிகமாக பார்க்கவும், பகிரவும் பட்டு வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,168.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.