Show all

ஐயம் வேண்டாம்! சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் தீபாவளி வெளியீடே: இயக்குநர் செல்வராகவன்

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'என்ஜிகே' படம் குறித்து வதந்தி பரவிய நிலையில், அதுகுறித்து படத்தின் இயக்குநர் செல்வராகவன் கீச்சுப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படத்தல் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால், படப்பிடிப்பை தொடர முடியவில்லை என்றும், எனவே படம் தீபாவளிக்கு வெளியாகாது ; கிறிஸ்துமசுக்கு தள்ளிப்போனதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவின. 

நண்பர்களே, இது ஒரு எளிமையான மருத்துவ சிகிச்சை தான். நான் நலமுடன் இருக்கிறேன். இன்னும் ஒரு சில நாட்களில் என்ஜிகே படப்பிடிப்பு தொடங்கும். உங்களது அன்பிற்கு நன்றி என்று கூறியிருக்கிறார். இயக்குநர் செல்வராகவன்.

இதன்மூலம் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகி இருக்கிறது. விஜய்யின் சர்கார் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் சூர்யாவின் கதைத்தலைவியாக சாய் பல்லவி நடிக்கிறார். ரகுல் ப்ரீத்தி சிங் உடன் நடிக்கின்றார். ஜெகபதிபாபு பகைவனாக நடிக்க, ராம்குமார் கணேசன், இளவரசு, பாலா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,860. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.