இணையத்தளத்தில் அதிகம் கலாய்க்கப்பட்ட அரசியல்வாதிகளில்
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி முதலிடத்தில் உள்ளார் என்று பிரதமர் மோடி விமர்சனம்
செய்துள்ளார். உத்தரபிரதேச பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்து
வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல்
நடைபெறுகிறது. இம்முறை மும்முனைப்போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதா கட்சி,
காங்கிரஸ்- சமாஜ்வாதி
கட்சி கூட்டணி மற்றும் பகுஜன்
சமாஜ் கட்சி ஆகிய மூன்று பெரிய கட்சிகள் மோதுகின்றன. உத்தரபிரதேசத்தில் கருத்துபரப்புதலில் ஈடுபட்டிருந்த
பிரதமர் மோடி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்து பேசினார். அரசியல்வாதிகளைக்
கொண்டு உருவாக்கப்படும் நகைச்சுவைகளில், ராகுல் காந்தியை கொண்டு உருவாக்கப்பட்டவை தான்
அதிகம் உள்ளன. கூகுளில் தேடிப்பார்த்தால் தெரியும் என்றும் கலாய்த்தார். சொந்தக்கட்சியினரே
ராகுலை தள்ளிவைத்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவ் அவருடன் எப்படி கூட்டணி வைத்தார் என்று
தெரியவில்லை என்றும் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



