திமுக: தமிழர்
ஆதரவு தீவிரவாத இயக்கமாகவே, இந்தியா முழுவதும் தொடங்கிய காலமுதல் இன்று வரை நம்பப்
பட்டு வருகிறது. ஆனால் இந்திய இறையாண்மைக்கு எதிரான இயக்கம் அல்ல
திமுக என்பதை நிறுவுவதிலேயே தன் முழுக்காலத்தையும் செலவளித்து வந்திருக்கிறது திமுக. ராஜீவ் கொலைக்கு காரணம் என்று அடித்து நெறுக்கப்
பட்டபோது அப்பாவித் தனமாக மறுத்தது திமுக. ஒன்னரை இலக்கம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட
போது இந்திய இறையாண்மைக்கு எதிரான இயக்கமாக சித்தரிக்கப் பட்டு விடுமோ என்ற அச்சத்தில்
கை கட்டி வாய் பொத்தி நின்றது திமுக. கட்சத்தீவு தாரை வார்க்கப் பட்டபோதும் திமுக வின்
நிலை அதுதான். இன்றைக்கு அதிமுக மீதான பாஜக அரசியல் விளையாட்டிலும்
பலிகடாவாக, உண்மைக் குற்றவாளியை அடையாளம் காட்டுவது இந்திய இறையாண்மைக்கு எதிரான குற்றச்சாட்டாகி
விடுமோ என்று பல்லிளித்துக் கொண்டிருக்கிறது திமுக. பாவம் திமுக! இந்திய இறையாண்மையை ஒருபோதும் மதித்திராத காங்கிரசையும்
பாஜகவையும் தோலுரித்துக் காட்டுகிற முயற்சி கூட இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று
நம்ப வைக்கப் பட்டிருக்கிறது திமுக.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



