ரூபாய்தாள் செல்லாது
நடவடிக்கைக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையற்ற நிலை உருவாகியது.
அதுமட்டுமல்லாமல் வங்கிகளில் வைப்பு குவிந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த ரிசர்வ்
வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்
வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மேலும்
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரிசர்வ் வங்கிக் கொள்கைகள் பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து
மீட்டுக்கொண்டு வரும் வகையில் தான் எடுக்கப்பட்டன. சர்வதேச அளவில் பங்குச்சநதைகளின்
விலையும் கடும் வீழ்ச்சியடைந்தது. முன்னாள்
ஆளுநர் ரகுராம் ராஜன் 2015 தொடக்கத்தில் வட்டிவிகிதத்தைக் குறைத்தது. பிறகு தொடர்ந்து
குறைக்கப்பட்டு இதுவரை 175 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டது. ஆனால் வங்கிகள் பெரிய
அளவில் வட்டிவிகிதத்தை குறைக்காததால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்ததன் பலனை
மக்களால் அனுபவிக்க முடியவில்லை. தற்போது வங்கிகளில் வைப்பு குவிந்து கிடக்கிறது. அவற்றைக்
கடனாகக் கொடுக்க வேண்டிய அழுத்தம் உருவாகி இருக்கிறது. இந்த நிலையில்
ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்காமல் 6.25 சதவிகிதமாகவே தொடர்வது
சரியான முடிவுதான். மேலும் வங்கிகள் தங்களின் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்
என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் வலியுறுத்தி இருக்கிறார். வங்கிகள்
தற்போதிருக்கும் நிலையில் வட்டிவிகிதத்தைக் குறைத்தால்தான் பெரும்பாலானோர் கடன் வாங்க
முன்வருவார்கள். ரூபாய்தாள் செல்லாது நடவடிக்கையைத் தொடர்ந்து வட்டி விகிதம் குறைக்கப்படும்
என்ற எதிர்பார்ப்பு நிலவியது ஆனால் ரிசர்வ் வங்கி மூன்றாவது முறையாக வட்டி விகிதத்தை
மாற்றாமல் தொடர்வது முதலீட்டாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த முடிவு
இந்தியப் பொருளாதாரத்தை அதன் போக்கில் நகர அனுமதித்திருக்கிறது என்றே சொல்லலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



