இராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ள இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியோடு, இந்தியாவிற்கும் வந்தேவிட்ட கொரோனா பாதிப்பு ஆறினைத் தொட்டுவிட்ட நிலையில் மோடி- முகநூல், கீச்சு, படவரி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக யோசிப்பது குறித்த பதிவால், இராகுல் காந்தி கடும்கோபம் அடைந்தவராக கோமாளி விளையாட்டை நிறுத்துங்கள் என்று மோடியை எச்சரித்திருக்கிறார். நேற்று தனது கீச்சுப் பக்கத்தில் மோடி, முகநூல், கீச்;சு, படவரி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்தேன் என தெரிவித்தார். சமூக வலைதளங்களில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கும் மோடி இவ்வாறு பதிவிட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை உலக மகளிர் நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, நமது வாழ்விலும், பணியிலும் நமக்கு அதிகளவு ஊக்கமளிக்கும் பெண்களை கௌரவிக்கும் வகையில், எனது கீச்சுக் கணக்கை அன்றைய நாளில் பெண்களிடம் ஒப்படைக்கலாம் என இருக்கிறேன் என தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மோடியின் இந்தப்பதிவு குறித்து இணைய ஆர்வலர்கள், ‘உங்கள் மனைவிக்கு நிருவாகி பதவி எந்த சமூக வலைதளத்தில்’ என்பது போல கடுமையாகப் பகடியாடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, “இந்தியா அவசரநிலையை எதிர்கொண்டிருக்கும் இந்த நிலையில், உங்கள் சமூக ஊடக கணக்குகளுடன் கோமாளித்தனமாக விளையாடி நேரத்தை வீணாக்குவதை விட்டுவிடுங்கள். கொரோனா தொற்றுச் சவாலை ஏற்றுக்கொள்வதில் ஒவ்வொரு இந்தியருக்கும் கவனத்தை செலுத்துங்கள்" என தெரிவித்துள்ளார்.
20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கோமாளி விளையாட்டை நிறுத்துங்கள்! தலைமைஅமைச்சர் மோடியை நோக்கி, இராகுல் காந்தி இந்தக் கோபத்தை வெளிப்படுத்திருக்கிறார். காரணம்:- மோடி தனது சமூகவலைதள கணக்குகளைக் கைவிடப்போவதாக செய்திகள் பரவிய நிலையில், பெண்கள் நாளையொட்டி தனது கணக்குகளுக்குப் பெண்களை நிருவாகிகளாக நியமிக்கப்போவதாக மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் மோடியை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



