Show all

மோடிக்கு காங்கிரஸ் கேள்வி! இருக்கும் ரூ.3,800 கோடி தொகையே செலவழிக்கப்படாமல், கொரோனாவிற்கு மக்களிடம் இருந்து நிதித் தண்டல் எதற்கு?

சமூக வலை தளங்களில் பல்லாயிரக் கணக்கான கருத்துப்படங்கள் மூலம், கொரோனவிற்கு, மக்களிடமிருந்து பாஜக நடுவண் அரசு தண்டல் செய்ய முயல்வதை கிண்டலடித்து வருகின்றனர் மக்கள். உலக வரலாற்றில் இந்த முயற்சி மிகமிக இழிவாகப் பார்க்கப்படுகிறது.

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைமைஅமைச்சர் தேசிய நிவாரண நிதி என்ற ஒன்று ஏற்கெனவே பேரிடர் கால பயன்பாட்டிற்காக இருக்கும் போது எதற்காக தற்போது தலைமைஅமைச்சர் அக்கறை நிதியம் (பிஎம் கேர்ஸ் பண்ட்) என்ற புதிய நிதியத்தை உருவாக்க வேண்டும், என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், மற்றொரு ட்வீட்டுக்கு தனது கருத்தாக, பின்னூட்டமாக பிரதமர் கேர்ஸ் குறித்துப் பதிவிடுகையில், “பிரதமர் தேசிய நிவாரண நிதியை பிரதமர் கேர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டியதுதானே. வார்த்தைகளின் முதல் எழுத்தை தொகுத்துச் கவர்ச்சிக்காக சுருக்கமாக பெயர் வைப்பதில் பிரதமருக்கு பேரார்வம் அதிகம் என்பது சரி, ஆனால் எதற்காக புதிய நிதியம்? எதற்காகப் பொது அறக்கட்டளை ஏற்படுத்த வேண்டும்? அதுவும் அதன் விதிமுறைகள் பற்றி மூடுமந்திரமாக வைத்துக் கொண்டு?, நாட்டின் பிரதமரே இதற்கு நீங்கள் பதிலளிக்க வேண்டியுள்ளது. என்று கூறியுள்ளார்.

சனிக்கிழமையன்று  நடுவண் அரசு ‘தலைமைஅமைச்சரின் குடிமக்கள் உதவி விடுவிப்பு அவசரகால நிகழ் நிதியம்’ (Prime Ministers Citizen Assistance and Relief in Emergency Situations Fund-PM CARES Fund) என்பதை உருவாக்கியது. இதில் குடிமக்கள் தங்கள் பங்களிப்பைச் செய்யலாம் என்று அறிவித்தது.

ஆனால் தலைமைஅமைச்சர் தேசிய நிவாரண நிதியில் உள்ள தொகையையே இன்னும் செலவு செய்யவில்லை, அதில் இருக்கும் ரூ.3,800 கோடி தொகையே செலவழிக்கப்படவில்லை. இந்நிலையில் ஏன் புதியதாக ஒரு தண்டல் அமைப்பைப் தொடங்க வேண்டும். ஏன் தலைமைஅமைச்சர் மற்றும் 3 அமைச்சர்கள் மட்டும் அதில் இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர், குடிமைச் சமூக உறுப்பினர் இல்லாத ஒரு அறக்கட்டளை ஏன்? என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சல்மான் அனீஸ் சோஸ் கேட்டுள்ளார்.

சமூக வலை தளங்களில் பல்லாயிரக் கணக்கான கருத்துப்படங்கள் மூலம், கொரோனவிற்கு, மக்களிடமிருந்து பாஜக நடுவண் அரசு தண்டல் செய்ய முயல்வதை கிண்டலடித்து வருகின்றனர் மக்கள். உலக வரலாற்றில் இந்த முயற்சி மிகமிக இழிவாகப் பார்க்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.