தமிழகத்தில் பல இடங்களில் போதிய நுண்ணுயிரிக் கொல்லிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கலங்கவில்லை தமிழக மக்கள். 18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் பல இடங்களில் போதிய நுண்ணுயிரிக் கொல்லிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கலங்கவில்லை தமிழக மக்கள். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் இருக்கும் பேரையூரில் வசிக்கும் மக்கள் தண்ணீரில் வேப்பிலை, மஞ்சள் கலந்து தெளித்து வருகின்றனர். பெண்கள் குடங்களில் இந்தத் தண்ணீரை சுமந்து தெருக்களில் தெளித்து வருகின்றனர். நலங்கு வைத்தல் என்ற காப்பு நடைமுறையை, திருமணம், காதணிவிழா, வளைகாப்பு, பூப்பு நன்னீராட்டுவிழா, மஞ்சள் நீராட்டு என அனைத்து தமிழர் விழாக்களிலும் மஞ்சள் நுண்ணுயிர் கொல்லியாக தமிழ் மக்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக பேணப்பட்டு வந்திருக்கிறது. மஞ்சளை நாடு கடந்து விற்று அன்றைய தமிழ் வணிகர்கள் தங்கமும், இன்றும் ஈரோட்டு வணிகர்கள் டாலர் நாணயமும் அன்னியச் செலாவணியாக ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் செயற்கை மோகம் தந்த கொரோனா உயிர்ப்பலிக்கு செயற்கையை நம்பியிருக்க வேண்டாம் என்பதால் பல இடங்களிலும் மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா பரவல்தடுப்புக்கு மஞ்சள் பயன்பாட்டை கொணர்ந்துள்ளனர் தமிழக மக்கள். கொரோனா குணமளிப்புக்கு ‘சளிகாய்சல் மூலிகை குடிநீர்’ அகத்தியர் 2000 எனும் சித்த மருத்துவ நூலில் இருந்து கொரோனா அறிகுறிகளுக்கான மருந்தாக சித்த மருத்துவர்கள் கண்டு பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். உலகில் கொரோனாவை முதலில் விரட்டுவர் தமிழ்மக்கள் என்பது உறுதி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



