Show all

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்திருக்கிறது. 6பேரும் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். (முன்னெச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் இயங்குவதைத் தொடர்ந்து பேணுங்கள் தமிழ்மக்களே)

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நியூசிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும், தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்திருக்கிறது.

மூவரையும் தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6 பேரும் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (முன்னெச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் இயங்குவதைத் தொடர்ந்து பேணுங்கள் தமிழ்மக்களே)

விமானநிலையங்கள், துறைமுகங்கள், தொடர்வண்டி நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு அனைத்து பயணிகளிடமும் தீவிர பரிசோதனை செய்யப்படுவதாகவும், அந்த தீவிர பரிசோதனை காரணமாக இந்த அறுவருக்கும் கொரோனா தொற்று இருப்பதை அறிய முடிந்தது என்பதாகவும் நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமது கீச்சுப் பதிவில் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.