06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம், மலப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் குளம் வெட்டி மழைநீரை சேகரித்து வைத்துள்ளார். இந்தச் சிறிய குளத்தின் மூலம் அந்தக் கிராமத்தில் உள்ள மக்களின் வீடுகளின் கிணற்றுநீரின் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பெரும்பள்ளி அகமது. ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பல்வேறு பணிகளைத் தொடர்ந்து செய்து வந்துள்ளார். அதில் ஒன்று மழைநீர் சேகரிப்புத் திட்டமாகும். தனதுவீட்டின் வளாகத்தில் சிறிய குளம் அமைத்து அதில் ஒருலட்சம் லிட்டருக்கும் அதிகமான மழைநீர் சேமித்து வைத்துள்ளார். தனது வீட்டு வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குளத்தால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருக்கும் நிலத்தடி நீர் மட்டம் அனைத்தும் உயர்ந்துள்ளது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மகத்துவத்தை உணரத் தொடங்கியுள்ளனர். இதற்காக பெரும்பள்ளி ஆசிரயரின் இந்த செயலைப் பார்த்த கிராம மக்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர். இந்தக் குளத்தில் சிறுவர்கள், பெரியவர்கள் வரை குளித்து மகிழவும் அனுமதித்துள்ளார். இந்தக் குளத்தை உருவாக்குவதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், கிராம மக்களுக்கு நலம் பயக்கும் பல்வேறு விழிப்புணர்வு கருத்துப் பரப்பதல்களிலும் ஈடுபட்டுள்ளார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சிகளையும் நடத்துவார். இயற்கை வழி விவசாயத்தின் முதன்;மைத்துவத்தையும் மக்களுக்கு அறிவுறுத்திவந்தார். தனி ஆளாக இருந்து மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மகத்துவத்தை உணர்த்திய பெரும்பள்ளி ஆசிரியருக்கு கிராம பஞ்சாயத்து சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. பஞ்சாயத்துத் தலைவர் கருவல்லி ஹபிபா, நிலைக்குழுத் தலைவர் பி.பி.ரம்யா ராம்தாஸ், செயலாளர் பி.கே.ராஜீவ், உள்ளிட்டோர் நினைவுப்பரிசை வழங்கி பெரும்பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,856.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



