06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து இருப்பதாக பொது விவகார மையம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது பெங்களூரைச் சேர்ந்த அமைப்பு. இந்த அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இந்தியாவில் எல்லா மாநிலத்திலும் சிறப்பான ஆட்சி வழங்குவதற்கும், திட்டங்கள் மக்களை சென்று சேர்வதற்கும் இந்த நிறுவனம் ஆலோசனை வழங்கி வருகிறது. மொத்தம் 30க்கும் அதிகமான விசயங்களை வைத்து, இந்த பட்டியலை வெளியிட்டு இருக்கிறார்கள். பெரிய மாநிலங்கள் சிறிய மாநிலங்கள் என்று இரண்டு வகையாக பிரித்து மாநிலங்களை ஆய்வு செய்து இருக்கிறார்கள். அதன்பின், சிறந்த மாநிலங்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் சிறந்த ஆட்சி தரும் மாநிலமாக கேரளா பெயர் எடுத்து இருக்கிறது. அந்த மாநில அரசு மக்களுக்கு மிகவும் பிடித்தபடி ஆட்சி செய்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், அரசின் நலத்திட்டம் அப்படியே மக்களிடம் குறைவில்லாமல் சென்று சேர்ந்து இருப்பதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்து இருக்கிறதாம். கேரளாவிற்கு அடுத்தப்படியாக தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. தமிழக அரசில் நிறைய பிரச்சனைகள் மாற்றங்களும் குழப்பங்களும் இருந்தாலும் கூட, தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறதாம். தமிழகம் அதிக மக்கள் தொகையில் கூட, இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது. சுமார் 7.50 கோடி மக்கள் தொகையுடன் கூட, அரசின் திட்டங்கள் பெரும்பாலும் மக்களை சென்று சேர்ந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், பெரும்பாலான புதிய திட்டங்கள் ஆட்சியில் அறிமுகமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சரி சரி அதற்காக ஏன் விழுந்து விழுந்து சிரிக்கின்றீர்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,856.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



