Show all

வறுமை, ஊழலுக்கு எதிராக பாரதீய ஜனதா போராடி வருகிறது: பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் மிகப்பெரும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.

     சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதீய ஜனதா  வேட்பாளர்களை ஆதரித்து மீரட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வறுமை,ஊழலை முடிவுக்கு கொண்டு வரவே நமது போராட்டம் நடக்கிறது. இங்கு பிரசாரத்தை துவக்குவது பெருமையாக உள்ளது.  கடந்த 2.5 வருடங்களில், மோடி பெயரில் ஊழல் நடந்துள்ளதா?

     மீரட்டில் வேலைக்கு செல்லும் மக்கள், உயிருடன் வீடு திரும்பவது குறித்து அச்சப்படுகின்றனர். கொலைகாரர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில சட்டம் ஒழுங்கு குறித்து விமர்சித்தவர்கள், தற்போது அதற்கு காரணமாணவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். இது உடையும் கூட்டணி. அவர்கள் எவ்வாறு மாநிலத்தை காப்பாற்றுவார்கள்.

     சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணியாகவும் உள்ளது.  தங்களையே காப்பாற்றிக்கொள்ள முடியாதவர்களால் எவ்வாறு உத்தரபிரதேசத்தை காப்பாற்ற முடியும். உத்தர பிரதேச மக்களே உங்களுக்கு என்ன வேண்டும் பாரதீய ஜனதாவா? அல்லது ஊழலா? ஊழலுக்கு எதிராக  பாரதீய ஜனதா போராடி வருகிறது. ஊழலை விரட்டி அடிக்கும் வரை உத்தரபிரதேசத்தால் நல்ல நாட்களை பார்க்க முடியாது உத்தர பிரதேசத்தை புதிய உச்சத்துக்கு அழைத்துச்செல்ல உங்கள் ஆசிர்வாதத்தை கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

ஆனால் யாருடைய வறுமைக்கு எதிராக?

யாருடைய ஊழலுக்கு எதிராக என்பதை தாம் நாம் இந்திய அளவில் பார்த்துக் கொண்டிருக்கிறோமே.

ரூபாய்தாள் செல்லாது அறிவிப்பால்,

யார் பாதிக்கவேயில்லை! என்பதையும்,

ரூபாய்தாள் செல்லாது அறிவிப்பால்,

இரண்டு லட்சத்திற்கு மேல் வைப்பு செய்த நாடு முழுவதும் ஒரு கோடி பேர்களின் ஊழல்! என்பதையும்.

ஆனால் சுவிஸ் வங்கியில் இருப்பதாக தேர்தல் வாக்குறுதியில் சொன்ன கருப்பு பணமுதலைகளின் பட்டியலைக் காணவே காணோம்?!

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.