Show all

பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 33விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்துப் பெரும் வன்

     கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதாதளம், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளோடு நாகலாந்து மக்கள் முன்னணியின் ஆட்சி நாகாலந்தில் நடைபெறுகிறது.

     பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மக்கள் வன்முறையைக் கையில் எடுத்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

     நாகாலாந்து மாநிலத்தில், பெண்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் 33விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்துப் பெரும் வன்முறை வெடித்துள்ளது.

     நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், 33விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதாக, நாகாலாந்து அரசு அறிவித்தது.

     இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பழங்குடியின அமைப்புகள் உள்பட பல அரசியல் கட்சியினரும் இதில் கரம் கோர்த்து, நாகாலாந்து அரசுக்கு எதிராகப் பெரும் வன்முறைப் போராட்டத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

     கடந்த சில நாட்களாக, ஓரிரு இடங்களில் நடைபெற்றுவந்த வன்முறைச் சம்பவங்கள் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. தலைநகர் கொகிமா முழுவதும் வன்முறை பரவி உள்ளது. எங்கு பார்த்தாலும், அரசு கட்டிடங்களுக்கும், வாகனங்களுக்கும் தீ வைப்புகள் நடைபெறுவதால், மாநிலத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

     இதற்கிடையே, அம்மாநில சட்டப்பேரவையை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். அந்த சமயத்தில் நாகாலாந்து மாநில முதல்வர் டி.ஆர். ஜீலியாங், மற்றும் பிற அமைச்சர்கள் உள்ளே இருந்தனர். இதையடுத்து, அங்கே ஏராளமான ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

     மேலும், நாகாலாந்து முழுவதும் செல்பேசி மற்றும் இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

     முன்னதாக நேற்று இரவு காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே நடைபெற்ற மோதலில் இருவர் உயிரிழந்தனர், 10 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து மாநிலத்தின் வர்த்தக தலைநகர் திமாபூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.