Show all

வளர்ச்சி குறித்து பாடம் நடத்த வேண்டாம்: மம்தா பானர்ஜி

மேற்கு வங்க அரசுக்கு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பாடம் நடத்துவதை விடுத்து, அதற்குத் தேவையான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடுவண் அரசிடம் அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

     மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கிராமப் பஞ்சாயத்து சம்மேளனக் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மம்தா பானர்ஜி பேசியதாவது:

     நடுவண் அரசின் ரூபாய் தாள் திரும்பப் பெறுதல் நடவடிக்கையானது கிராமப்புறங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைச் சமாளிக்க ஏராளமான நிதி தேவைப்படுகிறது. ஆனால், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு நடுவண் அரசு நிதி வழங்குவதில்லை.

     வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மேற்கு வங்க அரசுக்கு நடுவண் அரசு பாடம் நடத்த வேண்டாம். அதற்குப் பதிலாக, மேற்கு வங்கத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவித்தால் மட்டும் போதும்.

என்றார் மம்தா பானர்ஜி.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.