12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அலகாபாத்துக்கு வந்திருந்த அமித்ஷாவுக்கு அலகாபாத் பல்கலைகழக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர். அப்போது காவல் துறையினர், இரண்டு மாணவிகள் ஒரு மாணவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். இதன் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒரு பெண்ணை தடியால் அடித்ததோடு காவல்துறையைச் சேர்ந்த இன்னொரு காவலர் மற்றொரு மாணவியின் தலைமுடியைப் பிடித்து இழுத்தார். காணொளிவில் மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் வேகமாக வந்து தலையிட்டு அடிக்க வேண்டாம் என்று தடுத்ததும் பதிவாகியுள்ளது. கருப்புக் கொடி காட்டிய மாணவர்களில், நேஹா யாதவ், ரமா யாதவ், கிஷன் மவுரியா ஆகிய 3 மாணவர்களும் கைது செய்யப் பட்டு உயர்அறங்கூற்று மன்றத்தில் இன்று அணியப் படுத்தப்படவுள்ளதாக காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,862.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



