Show all

ஆடுவோமே பள்ளு பாடுவோமே! ஒட்டு மொத்த இந்தியாவில் கொரோனா எதிர்ப்பில் தமிழகம் இரண்டாவது படியில் காலடி பதித்துள்ளது. 24000 கொரோனா கண்டுபிடிப்பு பேழைகள்

ஒட்டு மொத்த இந்தியாவில் முதலாவதாக சீனாவிலிருந்து- தமிழகம் தருவித்த 24000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் மூலம் பரிசோதனை தொடங்கப்பட்டு விட்டது. கொரோனா எதிர்ப்பில் தமிழகம் இரண்டாவது படியில் காலடி பதித்துள்ளது.

05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் கொரோனா கண்டுபிடிப்பு பேழைகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்வது சேலம் மற்றும் சென்னையில் தொடங்கியது.

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய கொரோனா கண்டுபிடிப்பு பேழைகளை, தமிழக அரசு சீனாவில் இருந்து கொள்முதல் செய்தது. இதில், முதல்கட்டமாக 24 ஆயிரம் பேழைகள் நேற்று சென்னை வந்தன. இதில் ஆயிரம் பேழைகள் சேலம் வந்தடைந்தன. இதனையடுத்து சேலத்தில், கொரோனா கண்டுபிடிப்பு பேழைகள் மூலம் கொரோனா பரிசோதனை செய்யும் பணி துவங்கியது. இந்த பரிசோதனை மூலம், அரை மணிநேரத்தில் முடிவுகள் கிடைக்கும். முதலில், 18 பேருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.

சென்னை, அரசு மருத்துவமனையிலும் கொரோனா கண்டுபிடிப்பு பேழைகள் மூலம் கொரோனா பரிசோதனை துவங்கியது. கோவையிலும், இந்தப் பேழைகள் மூலம் பரிசோதனை தொடங்கியது.

இந்த கொரோனா கண்டுபிடிப்பு பேழைகள், இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான வேலைகளை முன்று நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. தமிழகம் சீனாவிடம் கேட்பு வழங்கிய இலட்சகணக்கான கொரோனா கண்டுபிடிப்பு பேழைகள் விரைவில் வந்து சேரும். தமிழகத்தை அடுத்து ஒட்டுமொத்த இந்தியாவும் இந்தக் கருவிப்பயன்பாட்டை முன்னெடுக்கும் போது, அடுத்து இந்தியாவிற்கு தேவையாக இருப்பது கொரோனாவிற்கு சிகிச்சை மட்டுமே. நடப்பு சிகிச்சைகள் நல்ல பலனையே வழங்கி வருகின்றன. விரைவில்  இந்தியாவில் கொரோனா விரட்டப்படும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.