தனிநபர் கமுக்கம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச அறங்கூற்றுமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது. ஆதார் விவரங்களால் தனிநபர் உரிமை பறிக்கப்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், தனிநபர் உரிமை என்பது அனைவருக்கும் தலையாயது என்று 9 அறங்கூற்றுவர்கள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இதில், 9 அறங்கூற்றுவர்களுமே ஒருமித்த கருத்தைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தனிநபர் கமுக்கம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்ற மோடி அரசின் வாதத்தை உச்ச அறங்கூற்றுமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஆதாரைக் கட்டாயமாக்கி நடுவண் பாஜக மோடி அரசு பல்வேறு நடவடிக்கைககளை முன்னெடுத்து வந்த நிலையில், இந்த விவகாரத்தில் உச்ச அறங்கூற்றுமன்றம் எத்தகைய தீர்ப்பை வழங்கப்போகிறது என்பதை அனைத்துத் தரப்பினரும் ஆவலோடு எதிர்நோக்கியிருந்தனர். இந்த நிலையில், நடுவண் அரசுக்கு எதிராக உச்ச அறங்கூற்றுமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை வழங்கியுள்ளது. ஆதார் அட்டைக்காக மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிராக பல்வேறு மனுக்கள் அறங்கூற்றுமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன. மக்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிப்பது முறையல்ல என்றும் அது தனிநபர் கமுக்க பாதுகாப்புக்கு எதிரானது என்றும் அந்த மனுக்களில் வலியுறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து அந்த மனுக்களைப் பரிசீலித்த உச்ச அறங்கூற்றுமன்றம், தனிநபர் கமுக்கம் காப்பதை மக்களின் அடிப்படை உரிமையாக்குவது குறித்து விசாரிக்க முடிவு செய்தது. இதையடுத்து அந்த விவகாரம் 9 அறங்கூற்;றுவர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் ஜே.எஸ் கேஹர் தலைமையிலான அந்த அமர்வில் அறங்கூற்றுவர்கள் ஜே. செலமேஸ்வர், எஸ்.ஏ. பாப்தே, ஆர்.கே. அகர்வால், ரோஹின்டன் ஃபாலி நாரிமன், அபய் மனோகர் சாப்ரே, டி.ஒய். சந்திரசூட், சஞ்சய் கிஷண் கௌல், எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதனிடையே, விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மனுக்களின் மீதான தீர்ப்பை அரசியல் சாசன அமர்வு இன்று வெளியிட்டது தனிநபர் கமுக்கம் காப்பது அடிப்படை உரிமையே என ஆதார் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்புத் தீர்ப்பினை அளித்துள்ளது. தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை இல்லை என்ற நடுவண் அரசின் வாதத்தை உச்ச அறங்கூற்;றுமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. தனிநபர் அடிப்படை உரிமையை அரசியல் சாசனத்தின் 21வது பிரிவு உறுதி செய்கிறது என்று அறங்கூற்றுவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு நடுவண் அரசின் தலைமை வழக்குரைஞர் வேணுகோபால் ஆதரவு தெரிவித்துள்ளார். உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பு மிகச் சரியே என்றும் அவர் கருத்துக் கூறியுள்ளார். இந்தியாவில் நடுவண், மாநில அரசுகளால் வழங்கப்படும் சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச அறங்கூற்றுமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிக மிக தலையாயத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது தற்காலிக வெற்றியே. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் கூட்டாட்சிக்கு அடிகோலுவோமேயானல் இது நிரந்தர வெற்றியாக அமையும். மீண்டும் பாஜகவைத் தேர்ந்தெடுப்போமேயானால் தேவையான சட்டங்கள் நிறைவேற்றப் பட்டு இந்தத் தீர்ப்பை உச்ச அறங்கூற்று மன்றமே மாற்றிச் சொல்லும் நிலை உருவாக்கப்படும். மக்கள் சிந்திப்பார்களா?
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



