05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீவிரம் அடைந்த தென் மேற்கு பருவமழை போதும் போதும் என்னும் அளவுக்கு கேரளாவிலும் கர்நாடகாவிலும் கொட்டித் தீர்த்துள்ளது. கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதால், மாநிலமே வெள்ளத்தின் நடுவில் தத்தளித்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, உண்ண உணவு கூட இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களால் இயன்ற உதவிகளை செய்துவருகிறது. இது போல் கர்நாடகாவிலும் வெள்ளம் ஏற்பட்டு மாநிலத்தின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவர்களை சந்தித்து உணவு வழங்க சென்ற கர்நாடக அமைச்சர் எச்.டி ரேவண்ணா எதோ தேவையில்லாத பொருள்களை தூர தூக்கி வீசுவதை போல, பொதுமக்களை நோக்கி பிஸ்கட் பாக்கெட்டுகளை தூக்கி வீசியுள்ளார். இதனை காணெளியாக பதிவு செய்த இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து, அமைச்சரின் இந்த மனிதாபிமானற்ற செயலுக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வெள்ளம் பாதித்த பகுதிகளை உலங்கு வானூர்தியில் சுற்றிப்பார்த்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, பாதித்த பகுதிகளை விட்டு விட்டு உலங்கு வானூர்தியில் அமர்ந்து கொண்டு செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் குமாரசாமி, குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணா இந்த இருவரின் நடத்தை மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி செய்ய பிடிக்கவில்லை யென்றால் பதவி விலகி விட்டு போக வேண்டியது தானே என்கிறார்கள் மக்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,886.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



