Show all

ஒருபக்கம்: கரூரில் மகன் வாங்கிய கடனுக்காக பெற்றோர் தற்கொலை? மறுபக்கம்: பெரிய நிறுவனங்களின் ரூ.3.16 லட்சம் கோடி கடன் ரத்து!

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் நிகழ்ந்த இந்த இரண்டு செய்திகள் ஒன்று கேள்வியையும், மற்றொன்று வியப்பையும் தருகிறது. கேள்விக்கான செய்தி: கரூரில் மகன் பாபு வாங்கிய கடனுக்காக பெற்றோர் தந்தை கஸ்தூரி, தாய் கவுசல்யா உள்ளிட்டோர்  தற்கொலை செய்து கொண்டனர். தொழில் செய்ய பாபு வாங்கிய கடன் திருப்பிச் செலுத்த முடியாததால் மனமுடைந்து கரூரில் உள்ள வீட்டில் இருவரும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். நமது இந்தியாவில் இவர்களுக்கெல்லாம் அரசே கடன் கொடுத்து ஏன் காப்பாற்ற முடியாது என்கிற கேள்விக்கான செய்தி இது. 

பொதுத்துறை வங்கிகளில் பெரு நிறுவனங்கள் வாங்கிய ரூ.3.16 லட்சம் கோடி கடன் ரத்து செய்யப் பட்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுத்துறை வங்கிகளில் பெரிய நிறுவனங்கள் பெற்ற ரூ.3.16 லட்சம் கோடி வங்கிகளின் வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கீச்சுவில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது சாமானிய மக்கள் தங்கள் சேமிப்பு முழுவதையும் வங்கியில் வைப்பு செய்தனர். ஆதார் எண்ணை வங்கியில் அளித்தனர். வங்கிக் கணக்கில் இருந்து சொந்த பணத்தை எடுக்க முடியாமல் தவித்தனர்.

அதேநேரம் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது பெருநிறுவனங்களின் கருப்பு பணம் வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டது. தற்போது அந்த நிறுவனங்களின் ரூ.3.16 லட்சம் கோடி கடன் பொதுத்துறை வங்கிகளின் வரவு செலவு கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது மக்களின் பணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

அடடே! இவ்வளவு பணத்தை விட்டுத் தர இந்தியாவில் வாய்ப்பும் வளமையும் இருக்கிறதா என்கிற வியப்படைய வைப்பதற்கான செய்தியாக இருக்கிறது இந்தச் செய்தி. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.