15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாகை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர்கள் சீனி என்ற சந்திரசேகரன் (42), சரவணன் (40). வெளியில் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி அதிக வட்டிக்கு பிறருக்கு வழங்கி தொழில் செய்து வந்தனர். வட்டிக்கு கொடுத்த பணம் ரூ1 கோடி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் குறைந்த வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை தரும்படியும், இல்லையென்றால் கொன்றுவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். அதில் மனம் உடைந்த 2 பேரும் தங்கள் தங்களது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். வெளியூர் சென்று திரும்பிய சரவணனின் மனைவி, கணவர் தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதார். இந்தத் தகவலை நண்பர் சந்திரசேகரனிடம் தெரிவிக்க முயன்ற போது அவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து மயிலாடுதுறை காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்ற்னார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,927.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



