இந்திய இராணுவம் பனிமனிதன் யதி என்று வியந்து கீச்சு செய்திருந்தது. அது இரண்டு நாட்களாக பரபரப்பு கிளப்பிய நிலையில், அது பனிமனிதன் இல்லை பனிக்கரடி என்கின்றனர் நேபாள் அதிகாரிகள். 19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மனிதனைப் போலவே தோற்றம் கொண்ட பிரம்மாண்ட விலங்கினம்: அதன் பெயர் யதி அல்லது எட்டி யென்றும், அது பனி மனிதன் என்றும், உலா வரும் நம்பிக்கையின் அடிப்படையில், இந்திய இராணுவம், இமய மலைக் காடுகளில் வசிக்கும் பனி மனிதனின் காலடித்தடம் ஒன்றை கண்டதாக புகைப்படம் ஒன்றை கீச்சு செய்து இரண்டு நாட்களாக பரபரப்பு கிளப்பியிருந்தது இமய மலைக் காடுகளில் இந்திய ராணுவம் கண்டது பனிமனிதனின் கால்தடம் இல்லை. பனிக்கரடியின் கால்தடம் என்றும் நேபாள் அதிகாரிகள் கூறியுள்ளனர். இமய மலைக் காடுகளில் வசிப்பதாக நம்பி பனி மனிதனின் காலடித்தடம் ஒன்றை கண்டதாக இந்திய ராணுவம் புகைப்படம் ஒன்றை கீச்சு செய்திருந்தது. இதை ஆய்வு செய்வதற்காக நேபாளிலிருந்து இமய மலைக்கு அதிகாரிகள் சிலர் வந்திருந்தனர். அவர்கள் இந்திய ராணுவத்துடன் இணைந்து அந்த கால் தடத்தை ஆய்வு செய்ததில் அது பனிமனிதனின் கால்தடம் இல்லை. கரடியின் கால்தடம் என்று தெரியவந்ததாகவும் நேபாள் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,140.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



