Show all

பாஜகவில் இடம் பிடிக்க துண்டு போடுகிறாரா அர்ஜுன மூர்த்தி! பகடியாடும் இணைய ஆர்வலர்கள்

இனி இரஜினி கட்சி இல்லை என்றான பிறகு, மோடியும் இரஜினியும் எனது இரு கண்கள் என்று அர்ஜுன மூர்த்தி பேட்டி அளித்திருப்பதை, பாஜகவில் இடம் பிடிக்க துண்டு போடுகிறாரா அர்ஜுன மூர்த்தி என்று பகடியாடுகின்றனர் இணைய ஆர்வலர்கள்.
 
15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: பல்வேறுகட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, இரஜினி தன் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை நாளை வெளியிட உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். தான் தொடங்க உள்ள கட்சிக்கு அர்ஜுன மூர்த்தியைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் நியமித்திருந்தார் இரஜினி.

இதற்கிடையே தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் வருகை இல்லை என்பதை அதிகாரப்பாடாக நேற்று அறிவித்தார் இரஜினி. அதில் அர்ஜுன மூர்த்திக்கு தனது நன்றியையும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அர்ஜுன மூர்த்தி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறும்போது, ‘எனக்கு இரண்டு கண்கள். ஒன்று மோடிஜி மற்றொன்று ரஜினிஜி, ஏனெனில் இவர்கள் இருவருமே இந்திய மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் எதாவது சிறப்பாகச் (தமிழ்நாட்டை, வைத்து அல்லவா செய்து கொண்டிருக்கிறார்கள் இருவரும்) செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்.

தற்போது மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில், இரஜினி இந்த முடிவை எடுத்துள்ளார். இதை எதிர்த்தோ, மறு கருத்துக் கூறியோ, விமர்சனமோ செய்யக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்

கோவிட் காலகட்டத்தில் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பின்பற்றுவது எவ்வளவு முதன்மை என்பது எல்லோருக்கும் தெரியும். உடல்நலனைக் கருத்தில் கொண்டே இரஜினி இந்த முடிவை எடுத்துள்ளார்.

அவருடன் இருப்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. உடல்நிலை சரியில்லாத நேரத்தில் இரஜினியை விட்டுச் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. அவருடன் இணைந்து பயணிப்பதே என்னுடைய ஆசை’ என்று அர்ஜுன மூர்த்தி தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.