சிவானி நாராயணன் அம்மா செய்தது முழுவதுமே பிக்பாஸ் எழுதிக் கொடுத்த வசனமே. பிக்பாசுக்கு இலக்கு அளவீட்டுப் புள்ளி (டிஆர்பி) கிடைப்பதற்கு சிவானி அம்மா தன் பிள்ளையின் தரம் தாழ்த்தும் முயற்சிக்கு ஒத்துழைத்திருக்க வேண்டாம் என்றும் சில கொண்டாடிகள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 15,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிவானியின் அம்மா அகிலா- சிவானியை கண்டித்ததும் சிவானி விசும்பி விசும்பி அழுததும் இணைய ஆர்வலர்களின் சினத்தை தூண்டியிருக்கிறது. சிவானி அம்மா நாசுக்காக கண்டிக்காமல், கூடுதலாகவே சத்தம் போட்டும், தகாத வார்த்தைகளால் தொடர்ந்து திட்டியும் சிவானியை உலகஅளவிலான கொண்டடிகள் முன்னிலையில் கண்டித்தது வன்கொடுமைக்கு சமமானது என இயக்குநர் சி.எஸ். அமுதன் பதிவிட்டுள்ள கீச்சு பரபரப்பை கிளப்பி உள்ளது. சிவானிக்கு பதிலாக சிவானி அம்மாவை பிக் பாஸ் போட்டியாளர் ஆக்குங்க என்றும் ஒரு பக்கம் கொண்டாடிகள் பகடியாடி வருகின்றனர். இந்தப் பருவம் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி மிக மிக இயல்பாக போவதாகவும், சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் செட்டி, அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேறியதும் வீடே ஏதோ மயான அமைதியாக ஆன மாதிரி இருந்தது. இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் சிவானி அம்மா அகிலாவின் நுழைவு பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் சமூக வலைதளத்தையே அதிர வைத்துள்ளது. சிவானி நாராயணன் சின்னத்திரை தொடர்களில் நடித்தும் இன்ஸ்டாகிராமில் அன்றாடம் தவறாமல் புகைப்படம் பதிவிட்டும் பேரறிமுகமானவர். இவர் பிக் பாஸ் வீட்டில் பாலாவை சுற்றி சுற்றி வந்து கொண்டு இருந்ததைச் சுட்டிகாட்டி, சிவானி அம்மா, சிவானியை கண்டபடி திட்டி தனது மனக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தைக் கொண்டாடிகளால் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 படங்களை இயக்கிய இயக்குநர் சி.எஸ். அமுதன், எதேச்சையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. சிவானியின் அம்மா செய்தது சரியான செயல் அல்ல, அகவை எட்டிய ஒரு பெண்ணை இப்படி பொதுவெளியில் திட்டுவது தவறு என்று தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். சிவானி நாராயணன் ஒன்றும் சாதாரண பெண் அல்ல, தனக்கு பிடித்ததை செய்யக் கூடிய தைரியமான ஒரு பெண் தான். அதிலும் தொடர்களில் ஏகப்பட்ட நடிகர்களுடன் நடித்து பழகுவதை போலத்தான் பிக் பாஸ் வீட்டிலும் பழகி வருகிறார். இப்படி இத்தனை கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் சிவானியை தரக்குறைப்பு செய்வது பெற்றோர் செய்யும் வன்கொடுமை எனவும் குறிப்பிட்டுள்ளார். சிவானி நாராயணன் அம்மா செய்தது முழுவதுமே பிக்பாஸ் எழுதிக் கொடுத்த வசனமே. பிக்பாசுக்கு இலக்கு அளவீட்டுப் புள்ளி (டிஆர்பி) கிடைப்பதற்கு சிவானி அம்மா தன் பிள்ளையின் தரம் தாழ்த்தும் முயற்சிக்கு ஒத்துழைத்திருக்க வேண்டாம் என்றும் சில கொண்டாடிகள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



