Show all

353 மாவட்டங்களில் கொரோனாஆட்சிமை இல்லை! சிவப்பு, வெள்ளை, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியா

அடப்பாவிகளா! இப்போதுதான் வந்திருக்கிறது நடுவண் அரசு ஒருவழியாக தீர்வுப் பாதையின் தொடக்கத்திற்கு. 353 மாவட்டங்களில் கொரோனாஆட்சிமை இல்லை! சிவப்பு, வெள்ளை, பச்சை என 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்ட இந்தியா

03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று பரவுவதை கருத்தில் கொண்டு, நாடு முழுக்க உள்ள மாவட்டங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும் என்று நலங்குத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்த நிலையில், அதற்கான அறிவிப்பு இரவில் வெளியானது.

டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும். கொரோனாஆட்சிமை மாவட்டங்கள், கொரோனாஆட்சிமை இல்லாத மாவட்டங்கள், பசுமை மண்டல மாவட்டங்கள், என்று இவை வகைப்படுத்தப்படும். கொரோனா நுண்ணுயிரி பரவுவது அதிகமாக இருக்கக் கூடிய பகுதிகள், கொரோனாஆட்சிமை மாவட்டங்கள் என்ற பட்டியலின் கீழ் வரும்.

கொரோனா நுண்ணுயிரி தாக்கம் இருந்தாலும் கூட, அது கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடிய பகுதிகள் கொரோனாஆட்சிமை இல்லாத மாவட்டங்கள் என்ற பிரிவின்கீழ் வரும். முற்றாக கொரோனா நுண்ணுயிரி பாதிப்பு இல்லாத பகுதிகள் பசுமை மண்டலங்கள் என்ற பிரிவின்கீழ் வரும்.

இதுதொடர்பாக, அமைச்சரவை செயலாளர் இன்று காணொளி கலந்துரையாடல் மூலமாக, அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைவர்கள், நலங்குத்துறை செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதில் கிடைக்கப்பெற்ற தரவுகளை வைத்து மாவட்டங்களை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

நாட்டில் 170 மாவட்டங்களை கொரோனாஆட்சிமை பகுதிகளாக அடையாளம் கண்டு அவற்றை சிவப்பு மண்டலத்தின் கீழ் வகைப்படுத்தியுள்ளது, இது கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளின் கீழ் தொடர்ந்து இருக்கும்.

கொரோனாஆட்சிமை மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் தமிழ்நாடு உள்ளது (37 மாவட்டங்களில் 22) மகாராஷ்டிராவில் 14, உத்தரபிரதேசத்தில் 13, ராஜஸ்தானில் 12, ஆந்திராவில் 11 மற்றும் டெல்லியில் 10 உள்ளன.

600 க்கும் மேற்பட்ட நோயாளிகளை கொண்ட தெலுங்கானா மாநிலம் 9 கொரோனாஆட்சிமை மாவட்டங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளது, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் கர்நாடகா தலா 8 கொரோனாஆட்சிமைகளைக் கொண்டுள்ளன. கேரளா 7, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா தலா ஆறு. அஸ்ஸாம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தலா ஐந்து மாவட்டங்கள் உள்ளன, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா நான்கு மாவட்டங்கள் உள்ளன.

சிவப்பு மண்டல மாவட்டங்கள் பெரிய பரவல் அல்லது கொத்து பரவல் உள்ள பகுதிகளாக மேலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பெரிய பரவல் கொண்ட மாவட்டம் ஒரே மாதிரியான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்கும். 

வெள்ளை மற்றும் பச்சை மண்டலங்கள்: 207 மாவட்டங்களை கொரோனாஆட்சிமை அல்லாத மாவட்டங்களாக அரசு அடையாளம் கண்டுள்ளது, அவை வெள்ளை மண்டலத்தின் கீழ் வருகிறது.

பசுமை மண்டலத்தின் கீழ் எந்த தொற்றும் இல்லாத மாவட்டங்கள் வருகின்றன. இந்தியாவில் இதுபோல கொரோனா நோயால் பாதிக்கப்படாத 353 மாவட்டங்கள் உள்ளன. பசுமை மண்டலத்தின் கீழ் உள்ள 353 மாவட்டங்களில் ஏப்ரல் 20திற்கு பிறகு ஊரடங்கு தளர்வு இருக்கும்.

கொரோனாஆட்சிமை இல்லாத பகுதிகளில், ஏப்ரல் 20க்கு பிறகு ஊரடங்கு நடைமுறையில், பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று நடுவண் அரசு இன்று அறிவித்தது. இதற்கு வசதியாக எவையெல்லாம் சிக்கல் இல்லாத இடங்கள் என்று வகைப்படுத்தி அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள்ளேதான் இருந்து வருகிறது என்கிற நிலையில், கொரோனாஆட்சிமை இல்லாத பகுதிகளில் தொழில் வளர்ச்சி மீண்டும் தொடங்கும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.