Show all

இந்தியத்தலைமை அமைச்சர் மோடியின் மனைவி ஜசோதா பென்! கர்நாடகா கோயில்களில் வழிபாடு

கர்நாடகா கோயில்களில் வழிபாடு செய்த இந்தியத்தலைமை அமைச்சர் மோடியின் மனைவி ஜசோதாபென் கூறுகையில், மோடி மீண்டும் இந்தியத்தலைமை அமைச்சர் ஆனதற்கும் அயோத்தி வழக்கில் சுமூக தீர்வு ஏற்பட்டதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  இந்தியத்தலைமை அமைச்சர் மோடியின் மனைவி ஜசோதா பென், கர்நாடகா கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினார். கர்நாடகா மாநிலம் சிமோகாவில் உள்ள சிறப்பு பெற்ற ராமச்சந்திராபுரா மடத்திற்கு வருகை தந்த ஜசோதா பென், மடாதிபதி இராகவேஸ்வரா சுவாமியை சந்தித்தார். அப்போது வெள்ளி குடைஒன்றை வழங்கினார். 

பின்னர் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள நீலகண்டேஸ்வரர் கோயில் கண்டு மகிழ்ந்தார். அவருடன் இந்தியத்தலைமை அமைச்சர் மோடியின் சகோதாரர் அசோக் மோடி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

ஜசோதாபென் கூறுகையில், மோடி மீண்டும் இந்தியத்தலைமை அமைச்சர் ஆனதற்கும் அயோத்தி வழக்கில் சுமூக தீர்வு ஏற்பட்டதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.