சீனாவைத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், சேலம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தாக்குதலை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவைத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், சேலம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், இருமல், காய்ச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சிக்கல்கள் எழும்பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டுமென தெரிவித்தார். மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிப் பிரிவு, மருந்துகள் உட்பட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த நுண்ணுயிரி தாக்கினால் 2 விழுக்காடு மட்டுமே உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் தொற்று தாக்காது என்றும், தாக்கினாலும் எளிதில் குணப்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்திலுள்ள விமான நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகள், 14 நாட்கள் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக கூறிய விஜயபாஸ்கர், கொரோனா விழிப்புணர்வு தொடர்பான குறும்படம் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் முந்தாநாள் ஆய்வு மேற்கொண்ட தமிழக நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பயணிகள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில், உலக நலங்கு நிறுவனத்தின் விதிகளுக்கு உட்பட்டு, சென்னை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கெரோனாவிற்காக சிறப்பு சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



